/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 4 மாதத்தில் கிடப்பில் போடப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமானப் பண; மரத்தடியில் படிக்கும் அவலம் 4 மாதத்தில் கிடப்பில் போடப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமானப் பண; மரத்தடியில் படிக்கும் அவலம்
4 மாதத்தில் கிடப்பில் போடப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமானப் பண; மரத்தடியில் படிக்கும் அவலம்
4 மாதத்தில் கிடப்பில் போடப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமானப் பண; மரத்தடியில் படிக்கும் அவலம்
4 மாதத்தில் கிடப்பில் போடப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமானப் பண; மரத்தடியில் படிக்கும் அவலம்
ADDED : செப் 10, 2025 08:10 AM

பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, புதிதாக ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டடம் கட்டும் பணி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
இப்பள்ளியில் 1,500க் கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, போதிய கட்டட வசதி இல்லாததால் மாணவிகள் முடிக்க முடியாமல் அவதியடைந்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நபார்டு திட்டத்தில், ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் 8 வகுப்பறை கொண்ட கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
தொடர்ந்து, கட்டடம் கட்டும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது. தற்போது, கட்டடப்பணி பேஸ் மட்டம் வரை மட்டும் பணி நடந்துள்ளது. அதன் பிறகு கடந்த 4 மாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து முடிக்கும் அவலம் நீடித்து வருகிறது. பலத்த காற்று வீசும்போது மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டப் பணியை முழுமையாக விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.