ADDED : மார் 17, 2025 06:26 AM

சிதம்பரம், : சிதம்பரம் அடுத்த உசுப்பூர் சபா நகரில் உள்ள ஏ.ஆர்.என். நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் 36வது ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை வசுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறை பேராசிரியர் பாலகுமார், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஆசிரியர் பிருந்தாதேவி நன்றி கூறினார்.