சாத்தப்பாடி பள்ளி நுாற்றாண்டு விழா
சாத்தப்பாடி பள்ளி நுாற்றாண்டு விழா
சாத்தப்பாடி பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 22, 2025 08:52 PM

புவனகிரி : புவனகிரி அடுத்த சாத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நுாற்றாண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியை மரியலூவி வரவேற்றார். தலைமை ஆசிரியை குளோத்தில்டாமேரி பழைய மாணவர்கள் மற்றும் தற்போதுள்ள மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினர். முன்னாள் மாணவர்கள் ஜோதிமணி, சேகர், ராமலிங்கம், ராஜேந்திரன், பரந்தாமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, அரசு பள்ளிக்கு மேலும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியை கீதா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் குமார் நன்றி கூறினார். பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.