/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மணல் குவாரி கலவர வழக்கு; கடலூர் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்மணல் குவாரி கலவர வழக்கு; கடலூர் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்
மணல் குவாரி கலவர வழக்கு; கடலூர் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்
மணல் குவாரி கலவர வழக்கு; கடலூர் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்
மணல் குவாரி கலவர வழக்கு; கடலூர் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்
ADDED : ஜன 05, 2024 12:38 AM

கடலுார் : மணல் குவாரி கலவர வழக்கில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று கடலுார் கோர்ட்டில் ஆஜரானார்.
அரியலுார் மாவட்டம் செந்துறை அடுத்த சன்னாசிநல்லுார், கடலுார் மாவட்டம் ஆவினங்குடி அடுத்த நெய்வாசல் இடையே வெள்ளாற்றில், கடந்த 2015ல் மணல் குவாரி செயல்பட்டது. மணல்குவாரி யாருக்கு சொந்தம் என்பதில், இரு மாவட்டத்தையொட்டிய கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 144 தடை உத்தரவை மீறி, கடந்த 31.1.2015ல், 50க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆவினங்குடி போலீசார், தற்போது அமைச்சராக உள்ள சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திட்டக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், சிவசங்கர் அமைச்சரானதால், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் வழக்குகளை விசாரணை செய்யும் கடலுார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. கடலுார் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் சிவசங்கர் கோர்ட்டில் ஆஜரானார். விசாரணை செய்த நீதிபதி வனஜா, வரும் 18ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கோர்ட்டில் ஆஜரான அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், '2015ல் அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிட்டு பொய் வழக்கு போடப்பட்டது. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன்' என்றார்.