/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வெலிங்டன் நீர்த்தேக்கத்தை சீரமைக்க ரூ. 130 கோடி ... ஒதுக்கீடு: திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சிவெலிங்டன் நீர்த்தேக்கத்தை சீரமைக்க ரூ. 130 கோடி ... ஒதுக்கீடு: திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
வெலிங்டன் நீர்த்தேக்கத்தை சீரமைக்க ரூ. 130 கோடி ... ஒதுக்கீடு: திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
வெலிங்டன் நீர்த்தேக்கத்தை சீரமைக்க ரூ. 130 கோடி ... ஒதுக்கீடு: திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
வெலிங்டன் நீர்த்தேக்கத்தை சீரமைக்க ரூ. 130 கோடி ... ஒதுக்கீடு: திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 11, 2025 03:27 AM

திட்டக்குடி: கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள், வாய்க்கால்களை சீரமைக்க ரூ. 130 கோடி நிதி ஒதுக்கிடு செய்து முதல்வர் ஸ்டாலின், அரசாணை வெளியிட்டதால் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் பிரதான நீர்த்தேக்கமாக வெலிங்டன் உள்ளது. இந்த நீர்த்தேக்கமானது 2,580 மில்லியன் கனஅடி நீர்பிடிப்பு கொண்டது.
இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பருவமழை மற்றும் கோடை மழை காலங்களில் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் முழுகொள்ளளவு தண்ணீர் பிடிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் வெலிங்டன் நீர்த்தே க்கத்தின் கரைகள், பாசனத்திற்கு திறக்கப்படும் மேல் மட்ட மற்றும் கீழ்மட்ட வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள்முறையாக துார்வாரப்படுவதில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்த்தேக்கத்தில் நீர்மட்ட த்தின் அளவு மட்டுமே 29 அடியை எட்டி விடுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகளும் விழா எடுத்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விடுகின்றனர். ஆனால் நீர்த்தேக்கமும், வாய்க்கால்களும் சரிவர துார்வாராததால் பல இடங்களில் கரைகள் வலுவிழந்து உடைப்பு ஏற்படுகின்றன.
இதனை நீர்வளத்துறை அதிகாரிகளும் பொக்லைன் மூலம் கரை உடைப்பை அவ்வப்போது சரி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். வெலிங்டன் நீர்த்தேக்கம் துார்வாருதல், கரைகள் மற்றும் பாசன வாய்க்கால்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகா விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்த பிப்ரவரி மாதம் 21ம்தேதி கடலுாரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கரைகள் பலப்படுத்துதல் வாய்க்கால்கள் புனரமைக்க ரூ. 130 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். இதனால் இரு தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் பல மாதங்களுக்கு பிறகு, கடந்த 8ம்தேதி வெலிங்டன் நீர்த்தேக்கம் சீரமைக்க ரூ. 130 கோடி ஓதுக்கீடு செய்து அறிவித்தார்.
அதில், நீர்த்தேக்கத்தின் கரைகளை சீரமைக்க 74 கோடியும், முதன்மை கால்வாய் சீரமைக்க 20 கோடியும், உபரி நீர் கால்வாய் சீரமைப்புக்கு 36 கோடி ரூபாய் ஒதுக்கீது செய்யப்பட்டது.
இதனால், திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.