ADDED : செப் 23, 2025 11:37 PM
புவனகிரி; மின் கசிவால் கூரை வீடு எரிந்த சேதமானது.
புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார், மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் சையத் உமர்,70;இவரது கூரை வீடு நேற்று தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் விசாரணை நடத்தியதில் மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது.