ADDED : ஜன 25, 2024 04:23 AM
திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த மருதத்துார் கிராமத்தில் கட்டி முடிக்கப்படாத கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன், மீட்கப்பட்டார்.
திட்டக்குடி அடுத்த மருதத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மகன் பவின்,6; இறையூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு கட்டி முடிக்கப்படாத கழிவுநீர்க் கால்வாயில் தவறி விழுந்தார். இதை பார்த்த உடன் விளையாடிய சிறுவர்கள் சத்தம் போட்டனர்.
அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, சிறுவனை மீட்டனர். காயமடைந்த சிறுவனை, திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.