ADDED : ஜூன் 01, 2025 04:20 AM
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் கடலில் மூழ்கிய சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கடலுார், வரக்கால்பட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், நேற்று மாலை 5:00 மணிக்கு தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு குடும்பத்தினருடன் வந்தார். அப்போது, அவரது மகன் யோகேஷ், 15; கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். உடன், அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதும் போலீஸ் மீட்பு குழுவைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் கடலில் இறங்கி சிறுவனை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.