/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை பணி கிடப்பில் விரைந்து முடிக்க கோரிக்கை சாலை பணி கிடப்பில் விரைந்து முடிக்க கோரிக்கை
சாலை பணி கிடப்பில் விரைந்து முடிக்க கோரிக்கை
சாலை பணி கிடப்பில் விரைந்து முடிக்க கோரிக்கை
சாலை பணி கிடப்பில் விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2025 12:53 AM

திட்டக்குடி: கிடப்பில் போடப்பட்ட சுடுகாடு செல்லும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த கூடலுார் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள சுடுகாடு செல்லும் சாலையை பயன்படுத்தி விவசாயிகள் பயிர்களுக்கு இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களை கொண்டு சென்றனர்.
நாளடைவில் பராமரிப்பின்றி காணப்பட்ட இச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் கிராம மக்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல முடியாமலும், விவசாயிகள் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 720 மீட்டர் துாரத்திற்கு 25 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலைப்பணி துவங்கியது.
ஆனால் ஜல்லிகள் கொட்டிய நிலையில் மற்ற பணிகள் எதுவும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. . இதனால் கிராம மக்கள், விவசாயிகள் இச்சாலை வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட சுடுகாடு செல்லும் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.