/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க கோரிக்கைஇருதய அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க கோரிக்கை
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க கோரிக்கை
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க கோரிக்கை
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க கோரிக்கை
ADDED : ஜன 07, 2024 05:36 AM

-சிதம்பரம்; சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணரை நியமிக்க வேண்டும் என, நகரமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சிதம்பரம் நகர மன்ற கூட்டம் சேர்மன் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. பொறியாளர் மகாராஜன், மேலாளர் செல்வி, சுகாதார அலுவலர் பிச்சைமுத்து முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், காங்., கவுன்சிலர் மக்கின் பேசுகையில், சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்கான நிபுணரை நியமிக்க வேண்டும் என்றார்.
அடுத்து தி.மு.க., கவுன்சிலர்கள் ரமேஷ், ஜேம்ஸ் விஜயராகவன், அப்புசந்திரசேகர் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இறுதியாக சேர்மன் செந்தில்குமார் பேசும்போது, சிதம்பரம் நகரம் புகழ்பெற்ற கோவில் நகரமாக உள்ளதால் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள அரசு மருத்துவக்கல்லுாரிக்கு இருதய அறுவை சிகிச்சை நிபுணர்நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நகராட்சி துணைசேர்மன் முத்துக்குமார், கவுன்சிலர்கள் ராஜன், வெங்கடேசன், மணிகண்டன், ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், இந்துமதிஅருள், லதா, சுனிதா மாரியப்பன், கல்பனா, புகழேந்தி, அசோகன், தஸ்லிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.