ADDED : ஜன 29, 2024 06:18 AM

புவனகிரி, : கீரப்பாளையம், மேல்புவனகிரி ஒன்றியங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் துணை சேர்மன் காஷ்மீர்ச்செல்வி விநாயகம், பி.டி.ஓ.,க்கள் பாலக்கிருஷ்ணன், இப்ராகிம் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் வரவேற்றார். சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தேசியக்கொடி ஏற்றினார்.
மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் துணை சேர்மன் வாசுதேவன், பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், முருகன் முன்னிலை வகித்தனர். மேலாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார். சேர்மன் சிவப்பிரகாசம் தேசியக்கொடி ஏற்றினார். புவனகிரி பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்லப்பிள்ளை வரவேற்றார். துணை சேர்மன் லலிதா மணி முன்னிலை வகித்தார். சேர்மன் கந்தன் தேசியக்கொடி ஏற்றினார்.