/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்பு அகற்றம்தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜன 07, 2024 05:40 AM
திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த மா.புடையூரில் அரசுக்கு சொந்தமான இடத்திலிருந்த, தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மா.புடையூர் கிராமத்தில் தனியார் வேளாண் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரி நிர்வாகத்தினர், எழுத்துார் மற்றும் மா.புடையூர் கிராம எல்லைகளில் உள்ள 2 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அண்மையில் அளவீடு செய்து கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்து, திட்டக்குடி தாசில்தார் ஜெயந்தி, மண்டல துணை தாசில்தார் முருகன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.
அப்போது கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பரபரப்பு நிலவியது.
போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். அதைத்தொடர்ந்து மாலை வரை பாதியளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் இன்று 6ம் தேதி அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.