/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம் ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்
ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்
ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்
ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : மே 22, 2025 11:34 PM
நடுவீரப்பட்டு: மலட்டாறில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
பண்ருட்டி, மேல்குமாரமங்கலம் அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் ராஜேஷ்,13; இவர் அரசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்றார். கடந்த 21ம் தேதி காலை 10:00 மணிக்கு அரசூர் கிராமத்தின் வழியே செல்லும் மலட்டாறில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார்.
சிறுவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்பேரில், நேற்று டி.ஆர்.ஓ., ராஜசேகரன் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ராஜேந்திரனிடம் வழங்கினார்.