/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுாரில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைகடலுாரில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
கடலுாரில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
கடலுாரில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
கடலுாரில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
ADDED : ஜன 25, 2024 04:25 AM

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில், போலீசார் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில், வரும் 26ம் தேதி, குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. கலெக்டர் அருண் தம்புராஜ் தேசிய கொடி ஏற்றுகிறார். எஸ்.பி., ராஜாராம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்க உள்ளார்.
இதற்காக அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீசார் நேற்று அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.