/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்
வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்
வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்
வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்
ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வடிகால்கள் துார்ந்து கிடப்பதால் மழைநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.விருத்தாசலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பகலில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மாலை நேர மழை மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. நேற்று மாலை 3:00 மணி முதல் பலத்த மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் பெருக்கெடுத்தது.வடிகால்கள் துார்வாரப்படாததால், சாலைகளில் குளமாக தண்ணீர் தேங்கியது.மேலும் பஸ் நிலையம், தெற்கு தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து, நிறம் மாறி காணப்பட்டது.இதனால் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமமடைந்தனர். மழை காலம் துவங்கியதால் வடிகால்களை துார்வாரி, மழைநீர் தடையின்றி வழிந்தோட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.