/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிரிட்டிஷ் காலத்தில் பிரிக்கப்பட்ட எல்லை விருத்தாசலம் ரயில்வே போலீசார் அவதி பிரிட்டிஷ் காலத்தில் பிரிக்கப்பட்ட எல்லை விருத்தாசலம் ரயில்வே போலீசார் அவதி
பிரிட்டிஷ் காலத்தில் பிரிக்கப்பட்ட எல்லை விருத்தாசலம் ரயில்வே போலீசார் அவதி
பிரிட்டிஷ் காலத்தில் பிரிக்கப்பட்ட எல்லை விருத்தாசலம் ரயில்வே போலீசார் அவதி
பிரிட்டிஷ் காலத்தில் பிரிக்கப்பட்ட எல்லை விருத்தாசலம் ரயில்வே போலீசார் அவதி
ADDED : செப் 03, 2025 07:27 AM
பி ரிட்டிஷ் ஆட்சியில், 1836ம் ஆண்டில், மதராஸ் மாநிலத்தில் இந்தியன் ரயில்வே துவங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் 4வது இடம் பிடித்துள்ளது. இந்தியன் ரயில்வே. 2022ம் ஆண்டு வரை இந்திய அளவில் 13.8 லட்சம் பணியாளர்கள், இந்தியன் ரயில்வேயில் பணிபுரிகின்றனர்.
இதன் மூலம் உலக அளவில், அதிக வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியன் ரயில்வே 14வது இடத்தில் உள்ளது.
ஆர்தர் காட்டன் என்கிற வெள்ளையரின் உத்தரவின்படி, சென்னை செங்குன்றம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை இந்தியாவின் முதல் ரயில் தடம் அமைக்கப்பட்டது.
அப்போது கிரானைட் கற்கள் எடுத்துச் செல்ல ரயில்கள் விடப்பட்டன. அடுத்தடுத்து அசுர வளர்ச்சியால், இந்தியன் ரயில்வே தனது அதிவேக போக்குவரத்து சேவை மூலம் வருவாயை குவித்தது.
அதற்கடுத்து 1880ம் ஆண்டில், தென்னிந்திய ரயில்வே, சென்னை முதல் துாத்துக்குடி வரை 715 கி.மீ., தொலைவில் மீட்டர் கேஜ் பாதையாக துவங்கியது. சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய வழித்தடங்கள் மூலம் பொது மக்கள், வணிகர்கள் பயனடைந்து வந்தனர். நாளடைவில் பயணிகள் வசதிக்காக மீட்டர் கேஜ் பாதைகள், அகலப்பாதையாக மாற்றப்பட்டன.
அதன்பின், விழுப்புரம் முதல் திருச்சி வரை அகல ரயில் பாதை, 2010ல் மின் மயமாக்கப்பட்டது. தொடர்ந்து, 2015ம் ஆண்டில் 1,500 கோடி ரூபாயில், விழுப்புரம் முதல் தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலுார், திருச்சி, திண்டுக்கல் வழியாக இருவழி ரயில் பாதை அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டது.
ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரிக்கப்பட்ட போலீஸ் எல்லை இதுநாள் வரை மாற்றப்படவில்லை.
குறிப்பாக, விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே போலீசாருக்கு, சென்னை மார்க்கத்தில், விழுப்புரம் ரயில் நிலையம் முன்னதாக கண்டம்பாக்கம் ரயில் நிலையம் வரை எல்லை உள்ளது.
அதுபோல், திருச்சி மார்க்கத்தில், ஸ்ரீரங்கம் அடுத்த பிச்சாண்டவர் கோவில் வரை உள்ளது.
இதனால், இரு புறமும் ரயில்வே மார்க்கத்தில் 150 கி.மீ., தொலைவுக்கு மேல் கவனிக்க வேண்டி இருப்பதால், ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைவோரை மீட்டு முதலுதவி தருவதிலும், இறப்போர், அவர்களின் உடல்களை மீட்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.
இது குறித்து ரயில்வே போலீசார் சார்பில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, பிரிட்டிஷ் காலத்தில் பிரிக்கப்பட்ட எல்லை அளவுகளை குறைத்து, குறைவான துாரத்தில் போலீசார் சென்று வர வசதியாக எல்லைகளை குறைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து மத்திய ரயில்வே வாரியம், தெற்கு கோட்ட ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்.