/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே கேட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ரயில்வே கேட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு
ரயில்வே கேட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு
ரயில்வே கேட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு
ரயில்வே கேட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு
ADDED : டிச 01, 2025 05:09 AM

விருத்தாசலம்: மூடப்பட்ட ரயில்வே கேட், திடீரென அறுந்து ஆட்டோ மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து, 100 மீ., தொலைவில், நாச்சியார்பேட்டை என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது.
இவ்வழியாக திருச்சி - சென்னை மார்க்கத்தில் ரயில்கள் செல்லும் போது கேட் மூடப்படும். நேற்று பகல் 2:00 மணியளவில், ரயில் இன்ஜின் செல்வதற்காக மூடப்பட்ட கேட், அதன்பின், திறக்கப்பட்டது.
அப்போது, ரயில் பாதையை கடந்து மறுமுனைக்கு சென்ற ஆட்டோ மீது ரோப் அறுந்து, கேட் விழுந்தது.
இந்த சம்பவத்தில், ஆட்டோ முகப்பு கண்ணாடி மட்டும் சேதமானது. ஆட்டோ ஓட்டுனர் பழமலைநாதர் நகரை சேர்ந்த தாமரைமணாலன், 40; காயமின்றி தப்பினார்.
தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் புதிதாக ரோப் மாற்றி, கேட்டை சீரமைத்தனர்.
ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன், சுரேஷ் உள்ளிட்ட போலீசார் சென்று போக்கு வரத்தை சீரமைத்தனர்.


