/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மார்ச் 2ல் ரயில் மறியல்; மா.கம்யூ., அறிவிப்புமார்ச் 2ல் ரயில் மறியல்; மா.கம்யூ., அறிவிப்பு
மார்ச் 2ல் ரயில் மறியல்; மா.கம்யூ., அறிவிப்பு
மார்ச் 2ல் ரயில் மறியல்; மா.கம்யூ., அறிவிப்பு
மார்ச் 2ல் ரயில் மறியல்; மா.கம்யூ., அறிவிப்பு
ADDED : பிப் 24, 2024 06:13 AM
கடலுார் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பியுள்ளனர்.
கடலுார் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் அனுப்பியுள்ள மனு;
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடலுார் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். கடலுார் துறைமுகம் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை, குடிநீர், கழிவறை, சைக்கிள் ஸ்டாண்ட், இரவு நேரங்களில் பஸ் வசதி (கடலுார் துறைமுகம் ஜங்ஷனில் இருந்து கடலுார் பஸ் நிலையம் வரை) உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கடலுாரில் மன்னார்குடி மஹால் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும்.
சேலம்-விருத்தாசலம், விழுப்புரம்-தாம்பரம் ரயில்கள் கடலுார் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே போர்டுக்கு முன்மொழிந்துள்ளதை ரயில்வே வாரியம் ஒப்புதல் தர வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து கோவை,மைசூர் செல்லும் ரயில்கள் கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி கடலுார் அனைத்து கட்சி மற்றும்குடியிருப்போர் அமைப்பு, பொதுநல அமைப்புகள் சார்பில் வரும் மார்ச் 2ம் தேதி கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.