/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காவல் துறை வாகனங்கள் 12ம் தேதி பொது ஏலம்காவல் துறை வாகனங்கள் 12ம் தேதி பொது ஏலம்
காவல் துறை வாகனங்கள் 12ம் தேதி பொது ஏலம்
காவல் துறை வாகனங்கள் 12ம் தேதி பொது ஏலம்
காவல் துறை வாகனங்கள் 12ம் தேதி பொது ஏலம்
ADDED : ஜன 07, 2024 05:28 AM
கடலுார்: கடலுாரில் போலீசார் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் வரும் 12ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.பி., ராஜாராம் செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு கடலுார் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏலம் எடுக்க விரும்புவோர் 11ம் தேதி மாலை வாகனங்களை பார்வையிடலாம்.
ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே பொது ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற் றும் அதற்கான ஜி.எஸ்.டி., இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் தொகை அரசுக்கு செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.