ADDED : ஜூன் 07, 2025 10:12 PM

புவனகிரி : முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அழிச்சிகுடி ஊராட்சி, நாலாந்தெத்து தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிளை செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். அட்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியை பத்மாவதி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பிரிவு கவுதமன், மணிவேல், சிதம்பரம், பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியை செந்தாமரை நன்றி கூறினார்.