/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கல்அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கல்
ADDED : பிப் 06, 2024 06:17 AM

நெய்வேலி : நெய்வேலி அடுத்துள்ள காடாம்புலியூரில் ரூ. 48.06 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழாவில், வீடுகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கணேசன் வழங்கினார்.
நெய்வேலி அருகே காடாம்புலியூரில், அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு மையம் சார்பில் ரூ. 48.06 கோடி செலவில், 504 புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன், புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வழங்கினார்.
பண்ருட்டி ஒன்றியக்குழு சேர்மன் சபா பாலமுருகன், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன், உதவி நிர்வாக பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் செந்தில்குமார், பண்ருட்டி பி.டி.ஓ.க்கள்., சங்கர், சக்தி, தி.மு.க., நிர்வாகி ராஜா, நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காடாம்புலியூர் ஊராட்சி தலைவர் பூவராகவன் நன்றி கூறினார்.