Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

ADDED : ஜன 03, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம் : தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என, பா.ம.க, தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.

சிதம்பரத்தில், பா.ம.க., சார்பில் சமூக நீதி காக்க, ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், நாடார் மக்கள் பேரவை தலைவர் ராஜா, தமிழ்நாடு யாதவ மகா சபை துணை பொது செயலாளர் சேதுமாதவன், சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:

ஆங்கிலேயர் காலத்து கணக்குப்படி, தற்போதும் இட ஒதுக்கீடு கொடுத்து வருகின்றனர். சமூக நீதி நிலைநாட்ட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு வரவேண்டும். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு தொகுதியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய தி.மு.க., மக்கள் முன்னேற இட ஒதுக்கீடு தர மறுக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் கொண்டு வந்து, அதை ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்பாக வைத்தார்.

தமிழகத்தில் 9 சதவீத இட ஒதுக்கீடு வந்ததை இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தனர்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறாகும். அரசியல் சட்டப்படி நகர்மன்ற தலைவர் கூட நகராட்சி பகுதியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம்.

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் எம்.பி., தேர்தல் வரவுள்ளது. அதற்கு முன்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், என தமிழக முதல்வர் அறிவிக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இண்டியா கூட்டணியில்உள்ள காங்., இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணெக்கெடுப்பு செய்ய வலியுறுத்தி வருகிறது. ஆனால், கூட்டணியில் உள்ள தி.மு.க., ஏன் செவி சாய்க்கவில்லை. பா.ஜ., எதை செய்யக்கூடாது என்றதோ, அதனை திமு.க., செய்யும். ஆனால் இந்த விஷயத்தில் தி.மு.க., வின் நிலைப்பாடு ஏற்கக்கூடியதாக இல்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us