/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு
குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு
குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு
குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு
ADDED : ஜூன் 17, 2025 12:35 AM
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே குளத்தில் மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பம் பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டது. சாலையோர பக்கவாட்டில் மண் கொட்டி பலப்படுத்தும் பணிக்காக அதே பகுதியில் உள்ள பாப்பான்குளத்தில் நேற்று மண் எடுக்கப்பட்டதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம மக்கள், மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தாதல் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.