Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நங்குடிகுப்பத்தில் விளை நிலங்கள் பாதிப்பு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

நங்குடிகுப்பத்தில் விளை நிலங்கள் பாதிப்பு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

நங்குடிகுப்பத்தில் விளை நிலங்கள் பாதிப்பு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

நங்குடிகுப்பத்தில் விளை நிலங்கள் பாதிப்பு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

ADDED : அக் 24, 2025 03:18 AM


Google News
Latest Tamil News
சேத்தியாத்தோப்பு: நங்குடிகுப்பத்தில் பெண்கள் வயலில் இறங்கி அழுகிய நெற்பயிருடன் அதிகாரிகளை கண்டித்து போராட்டம் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடியில் வி.கே.டி., பைபாஸ் சாலை உயர்மட்ட பாலம் கட்டப்பட்டதால் வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தடைப்பட்டது. வடிகால் வாய்க்கால்களை நங்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் ஆக்கி ரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடிய, விடிய பெய்த கனமழையால் நங்குடிகுப்பத்தில் சுமார் 100 ஏக்கர் நடவு வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சம்பா நெற்பயிர்கள் அழுகி வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பெண்கள் நேற்று காலை 10:00 மணியளவில் திடிரென பாதிப்பிற்குள்ளான வயல்களில் இறங்கி அழுகிய நெற்பயிர்களுடன் போராட்டம் செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, ''ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார், நகாய் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் இது நாள் வரை வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பை எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாகவும், நாங்கள் வடிகால் வாய்க்கால்களை துார்வாரவில்லை என்றால் விவசாயிகள், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம், என தெரிவித்தனர்.

பேராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் வராததால் போராட்டம் செய்தவர்கள் காலை 10:40 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us