/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு வி.சி., சார்பில் பரிசு மாணவர்களுக்கு வி.சி., சார்பில் பரிசு
மாணவர்களுக்கு வி.சி., சார்பில் பரிசு
மாணவர்களுக்கு வி.சி., சார்பில் பரிசு
மாணவர்களுக்கு வி.சி., சார்பில் பரிசு
ADDED : மே 21, 2025 02:45 AM

கடலுார் : குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வி.சி., சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் சுஜிதா, கோபிநாத், சுபாஷினி, ஹரிஷ்னா, எழில்வேந்தன், நிவாஸ், சித்தார்த், ஆசைவேந்தன் ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர்கள் அருண்குமார், கவுதம், தனலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
வி.சி., ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி, நகர பொருளாளர் சுமன்பிரபு, நிர்வாகிகள் சத்தியவாணி, மணிவண்ணன், கார்த்திக், சந்துரு, கபிலன், கணபதி, மனோ, புனிதவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.