ADDED : செப் 01, 2025 06:26 AM

விருத்தாசலம் : கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சிவநேசன் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். ஆசிரியை இளமதி வரவேற்றார். விழாவில், பள்ளி முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியை அரசி நன்றி கூறினார்.