ADDED : செப் 18, 2025 03:15 AM

கடலுார்: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, பா.ஜ.,சார்பில் கடலுாரில் பொதுமக்கள் அன்ன தானம் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, பா.ஜ.,சார்பில் கடலுார் வண்டிப்பாளையம் பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் பங்கேற்று அன்னதானத்தை துவக்கி வைத்தார். பொதுமக்கள் ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வண்டிப்பாளையம் நிர்வாகி சரவணன் நிகழ்ச்சி ஏற் பாடுகளை செய்திருந்தார்.