/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மது பிரியர்கள் கூடாரமான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மது பிரியர்கள் கூடாரமான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்
மது பிரியர்கள் கூடாரமான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்
மது பிரியர்கள் கூடாரமான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்
மது பிரியர்கள் கூடாரமான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்
ADDED : மார் 26, 2025 05:33 AM

புவனகிரி, தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டப் பின், இங்கு இயங்கிவந்த ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணாபுரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டது. இதனால் புவனகிரி மற்றும் சுற்று பகுதியில் 36 கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலர் கிருஷ்ணாபுரத்திற்கு சென்று வரமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.
மக்களின் பாதிப்பு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதன் எதிரொலியால் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில், மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் ஆரம்பு சுகாதார நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்போதைய ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் தீர்மானம் நிறைவேற்றி, இடம் வழங்கினார்.
பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு சார்பில், அனைத்து வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ. 1.20 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடித்து, பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. சுகாதாரத்துறையினர் அலட்சியத்தால், புதிய கட்டடம் வீணாகி வருவதுடன், தற்போது குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதுனால் பொதுமக்கள் நலன் கருதி, ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.