/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல் அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூன் 28, 2025 06:58 AM

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு 'தினமலர்-பட்டம் இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கினார். தலைமை ஆசிரியை இந்திரா, உதவி தலைமை ஆசிரியை முருகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.