ADDED : செப் 12, 2025 07:56 AM

நெல்லிக்குப்பம்; அ.தி.மு.க., வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு ஆதரவாக நெல்லிக்குப்பத்தில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கெடு விதித்தார்.
அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க., வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். செங்கோட்டையனின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நகர செயலாளர் தனசேகரன் நகரம் முழுவதும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். போஸ்டரில் 'பூனைக்கு மணி கட்டுவது யார், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற இரு பழமொழிகளை பூர்த்தி செய்த செங்கோட்டையனின் கருத்துகளை வரவேற்பதாக' குறிபிடப்பட்டுள்ளன.