ADDED : ஜன 11, 2024 04:22 AM

குள்ளஞ்சாவடி: அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது
தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு, ஆயிரம் பணத்துடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
துணைத் தலைவர் ராஜா, கிளைக் கழக செயலாளர்கள் ரவி, சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அம்பலவாணன்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று சென்றனர்.