ADDED : ஜன 10, 2024 11:17 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பெரியக்கடை ரேஷன் கடையில் நேற்று பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, 1000 ரூபாய் பணம், ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், முன்னாள் துணை சேர்மன் செழியன், மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
வங்கி செயலாளர் சக்கரபாணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அருள்முருகன், ஜாபர் ஷரீப், சரவணன், ரொகையாமா குன்முகமது, ராஜேஸ்வரி வேல்முருகன், நிர்வாகிகள் தங்கவேல், பாண்டியன், கணேசமூர்த்தி, ஜாபர் உட்பட பலர் பங்கேற்றனர்.