ADDED : ஜன 13, 2024 04:16 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எருமனுாரில் உள்ள டாக்டர் இ.கே.சுரேஷ் கல்விக்குழுமம், இந்துமதி சுரேஷ் கல்வியியல் கல்லுாரி, சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்விக்குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, சரஸ்வதி கல்விக்குழும செயலாளர் இந்துமதி சுரேஷ், இ.கே.சுரேஷ் கல்விக்குழும பொருளாளர் அருண், நிர்வாக மேலாளர் கவிபாண்டியன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனிவேல் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் பரிமாரப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.