பொங்கல் தொகுப்பு எம்.எல்.ஏ., வழங்கல்
பொங்கல் தொகுப்பு எம்.எல்.ஏ., வழங்கல்
பொங்கல் தொகுப்பு எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜன 11, 2024 04:25 AM

கடலுார்: கடலுார் சாவடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
கூட்டுறவு சார் பதிவாளர் லீமால் வரவேற்றார். தாசில்தார் அசோகன் முன்னிலை வகித்தார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
அப்போது, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், முன்னாள் இயக்குனர்கள் அண்ணாதுரை, ஹரிகிருஷ்ணன், கோண்டூர் ஊராட்சி துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், நத்தப்பட்டு கவுசல், முன்னாள் தலைவர் சுதாகர் மற்றும் ரவிராஜ், ஜோதி, முருகன், தயாளன், ரமேஷ், பரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு செயலர் அச்சுதன் நன்றி கூறினார்.