/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 05, 2025 03:30 AM

கடலுார்: சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காவலரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலர் விஜயகுமார். இவரது தாயார் மலர்க்கொடி, அரியலுார் மாவட்டம், பெரியாத்துக்குறிச்சியில் வசிக்கிறார். சொத்து பிரச்னை காரணமாக தனது மகன் விஜயகுமார் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கடந்த 25ம் தேதி, ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணைக்கு விஜயகுமாரை அழைத்துள்ளார். கடந்த 28ம் தேதி விஜயகுமார், ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷன் சென்று பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷை திட்டி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக ஆண்டிமடம் போலீசார், விஜயகுமார் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அதை தொடர்ந்து, காவலர் விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.