/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சிதம்பரத்தில் போலீசார் அதிரடி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சிதம்பரத்தில் போலீசார் அதிரடி
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சிதம்பரத்தில் போலீசார் அதிரடி
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சிதம்பரத்தில் போலீசார் அதிரடி
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சிதம்பரத்தில் போலீசார் அதிரடி
ADDED : ஜூன் 22, 2025 02:04 AM
சிதம்பரம் : சிதம்பரம் மேல வீதியில், போக்குவரத்து போலீசார் வாகனம் நிறுத்தத்திற்கு புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.
சிதம்பரத்தில், நாளுக்கு நாள் அதிகரித்துள்ள மக்கள் தொகை காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், சிதம்பரம் டி.எஸ்.பி., யாக லாமேக் பொறுப்பேற்ற பின்பு, போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வரும் 30ம் தேதி வரை சாலையின் மேற்கு புறம் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும், சாலையின் கிழக்கு புறம் இருசக்கர வாகனங்களும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேப் போன்று, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த முறை மாற்றப்பட்டு, சாலையில் கிழக்கு பக்கம் கார்களும், மேற்கு பக்கம் இரு சக்கர வாகனங்களும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நடைமுறை மாற்றப்படும் எனவும், இதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரவை மீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.