/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணிமுக்தாற்றில் மணல் கொள்ளை போலீசார் 'குறட்டை' மணிமுக்தாற்றில் மணல் கொள்ளை போலீசார் 'குறட்டை'
மணிமுக்தாற்றில் மணல் கொள்ளை போலீசார் 'குறட்டை'
மணிமுக்தாற்றில் மணல் கொள்ளை போலீசார் 'குறட்டை'
மணிமுக்தாற்றில் மணல் கொள்ளை போலீசார் 'குறட்டை'
ADDED : மே 21, 2025 02:50 AM

விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இரவு நேரங்களில் டயர் வண்டி, பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஆற்றுமணல் கடத்துவது வழக்கம். இதனை தடுக்க டயர் வண்டி செல்லும் ஓரிரு வழிகளை போலீசார் ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டி, பாதையை தடுத்துள்ளனர்.
அப்படி இருந்தும், ஒரு சில வழிகளில் டயர்வண்டி, பைக் உள்ளிட்டவைகளில் இரவு நேரங்களில் ஆற்று மணல் திருடிச் செல்வது தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, ராமசந்திரன்பேட்டை, பழமலைநாதர் நகர், நாச்சியார்பேட்டை பகுதிகளில் உள்ள மணிமுக்தாற்றில், பகல் நேரங்களில் பெண்கள் பலர் நடந்து சென்று சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த மணல் திருட்டு, தற்போது, அதிகரித்துள்ளது. பெரும்பாலும், இந்த பகுதிகளில் புதிதாக கட்டுமானம் மேற்கொள்ளும் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், சிலர் சாக்கு மூட்டைகளில் கொண்டு வரும் மணல்களை குவித்து வைத்து, வெளியூர்களுக்கு லாரியின் மூலம் அனுப்பி வைத்து நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். தொடர்ச்சியாக பகல் நேரங்களில் மணல் திருட்டு, போலீசாருக்கு தெரியாமலா நடக்கிறது என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.