ADDED : செப் 10, 2025 08:52 AM
புவனகிரி; புவனகிரி அடுத்த குறியாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். விவசாயி. இவரது மனைவி சரளாதேவி, 35; இருவருக்கும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 4 வயதில் பெண், ஒன்னறை வயதில் ஆண் குழந்தைகள் உள்ளது.
நேற்று முன்தினம் கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் வினோத்குமாரை மிரட்டுவதற்காக சரளாதேவி துாக்கு போட்டுக் கொண்டார்.
உறவினர்கள் மீட்டு சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி ஐந்தரை ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து சப் கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.