/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புத்தாண்டை முன்னிட்டு போலீஸ் தீவிர சோதனைபுத்தாண்டை முன்னிட்டு போலீஸ் தீவிர சோதனை
புத்தாண்டை முன்னிட்டு போலீஸ் தீவிர சோதனை
புத்தாண்டை முன்னிட்டு போலீஸ் தீவிர சோதனை
புத்தாண்டை முன்னிட்டு போலீஸ் தீவிர சோதனை
ADDED : ஜன 01, 2024 05:43 AM

கடலுார் : கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் புத்தாண்டை முன்னிட்டு மதுபாட்டில் கடத்தப்படுகிறதா என போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் இருந்து ஏராளமான பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன.
தமிழகத்தை விட புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில்கள் விலை குறைவாக இருப்பதாலும், விரும்பிய பிளேவர்கள் கிடைப்பதாலும் மதுப்பிரியர்கள் பலர் புதுச்சேரி சரக்கை விரும்பி குடிக்கின்றனர்.
2023ம் ஆண்டு நேற்று இரவுடன் முடிந்து இன்று 2024 புத்தாண்டு பிறக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சிலர் புதுச்சேரியில் இருந்து அதிகளவில் மதுபாட்டில்கள் கடத்தி செல்வது வழக்கம்.
அதையொட்டி நேற்று புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலுார் மாவட்டம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.