/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் விசாரணைபிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
பிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
பிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
பிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : ஜன 06, 2024 06:41 AM
கடலுார் : கடலுாரில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி உடலை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கடலுார், தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் தரணிதரன் மகள் சுவேதா,17; கடலுார், மஞ்சக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
வீட்டு வேலை செய்யாமல், அடிக்கடி மொபைல் போனில் பேசியதை அவர் தாய் கண்டித்தார். அதில் மனமுடைந்த சுவேதா நேற்று வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை போலீசுக்கு தெரிவிக்காமல், சுவேதா உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
அதனையறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் விரைந்து சென்று, சுவேதா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.