/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஜூன் 14, 2025 01:35 AM
கடலுார் : உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். பின், அவர் பேசுகையில், '2025 ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் பொருட்டு, கலெக்டரை தலைவராக கொண்டு செயல்படும் குழந்தை தொழிலாளர் தடுப்பு படை உறுப்பினர்களால் கடந்த 4 ஆண்டுகளில் 4,661 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், 31 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்' என்றார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், பயிற்சி கலெக்டர் மாலதி, நேர்முக உதவியாளர் (பொது) ரவி, உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு பங்கேற்றனர்.