/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் வீரர்கள் தேர்வு கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் வீரர்கள் தேர்வு
கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் வீரர்கள் தேர்வு
கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் வீரர்கள் தேர்வு
கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் வீரர்கள் தேர்வு
ADDED : மே 20, 2025 07:50 AM

கடலுார் : கடலுார் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 18 வயதுக்குட்பட்டவீரர், வீராங்கனைகள் தேர்வு, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கி, வீரர்கள் தேர்வை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், சங்க இணை செயலாளர்கள் செல்வராஜ், சகாய செல்வம், துணை செயலாளர் நடராஜன், தேசிய விளையாட்டுவீரர் தங்கதுரை முன்னிலை வகித்தனர். 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் கடலுார், நெய்வேலி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் சென்னை, காட்டாங்கொளத்துாரில் ஜூன் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.