/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணைஎம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை
எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை
எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை
எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை
ADDED : பிப் 24, 2024 06:25 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 13 மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், சென்னை சிம்கோ எச்ஆர் சர்வீஸ் பிரைவேட் லிட்., சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் தேவிகா மாணவிகளிடம் நேர்காணல் நடத்தினார்.
முகாமில் இ.இ.இ., -இ.சி.இ., மற்றும் சி.எஸ்.இ., துறையை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் இ.இ.இ., துறையில், 3, இ.சி.இ., 2, சி.எஸ்.இ., துறையில் 8 பேர் என, மொத்தம் 13 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு கல்லுாரி சேர்மன் கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.