ADDED : மார் 15, 2025 08:58 PM

விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தாம்பிகை கல்வி நிறுவன வளாகத்தில், உட்கோட்ட போலீசார் சார்பில் பெட்டிஷன் மேளா நடந்தது.
டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். விருத்தாசலம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் நகரம், அனைத்து மகளிர், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், ஆலடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் குறித்து புகார்தாரர், எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி, குணபாலன், சப் இன்ஸ்பெக்டர்கள் காந்தி, சங்கர், மாணிக்கராஜா, ராஜ்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்குகளை விசாரித்தனர்.