ADDED : மார் 25, 2025 06:52 AM

கடலுார் : அ.குச்சிப்பாளையம் கிராம மக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், அ.குச்சிப்பாளையம் கிராமம், புதுகாலனி மக்கள் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அளித்த மனு:
இப்பகுதியில் 35 ஆண்டுகளாக வசிக்கிறோம். ஆனால், இதுவரை பட்டா வழங்கவில்லை. மின் இணைப்பு வசதி உள்ளது. வீட்டு வரி செலுத்தி வருகிறோம். விவசாய கூலித் தொழில் செய்து வரும் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.