Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 40 கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகளை விரைவில் துவங்க மக்கள் கோரிக்கை

40 கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகளை விரைவில் துவங்க மக்கள் கோரிக்கை

40 கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகளை விரைவில் துவங்க மக்கள் கோரிக்கை

40 கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகளை விரைவில் துவங்க மக்கள் கோரிக்கை

ADDED : செப் 20, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்,: விருத்தாசலம் தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க என்.எல்.சி., நிர்வாகம் ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கியும், ஓராண்டாக கிடப்பில் போட்டுள்ளதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விருத்தாசலம் சட்டசபை தொகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கியது. விவசாயமே பிரதான தொழிலாக இருந்தாலும், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பெருவெள்ள காலங்களை தவிர மணிமுக்தாற்றில் நீர்வரத்து இல்லாமல், வறண்டு கிடக்கும்.

இதனால் விவசாயப் பணிகள் மட்டுமல்லாது விருத்தாசலம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில், மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் 25.20 கோடி ரூபாயில் நவீன முறையில் தடுப்பணை கட்டப்பட்டது.

இதன் மூலம் மணவாளநல்லுார், எருமனுார், மணலுார், நாச்சியார்பேட்டை பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்கும், குடிநீர் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும்.இருப்பினும் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சுரங்கப் பணிகள் காரணமாக நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு, குடிநீர் மாசடைந்துள்ளது. இதனால் விருத்தாசலம் தொகுதியில் கிராம மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது தொடர்கிறது.

இதை தவிர்க்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முயற்சியால், கடந்தாண்டு என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க 2.40 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் விருத்தாசலம், நல்லுார், கம்மாபுரம் ஒன்றியங்கள் அடங்கிய விருத்தாசலம் தொகுதி மற்றும் முத்தாண்டிகுப்பம், காட்டுக்கூடலுார் உட்பட 40 கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தரப்பில் இருந்து, குறிப்பிட்ட கிராமங்களின் பெயர்களுடன் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் இதுநாள் வரை குடிநீர் நிலையங்கள் அமைக்கவில்லை.

சமீபத்தில் எம்.எல்.ஏ.,வை சந்தித்த என்.எல்.சி., அதிகாரிகள், சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் ஏன் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினர். 2.40 கோடி ரூபாய் நிதி கிடைத்தும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்காததால் கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எனவே, குடிநீர் நிலையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us