/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குவாரியில் கனிமங்களை எடுக்க இணையதளம் வாயிலாக கடவுசீட்டு குவாரியில் கனிமங்களை எடுக்க இணையதளம் வாயிலாக கடவுசீட்டு
குவாரியில் கனிமங்களை எடுக்க இணையதளம் வாயிலாக கடவுசீட்டு
குவாரியில் கனிமங்களை எடுக்க இணையதளம் வாயிலாக கடவுசீட்டு
குவாரியில் கனிமங்களை எடுக்க இணையதளம் வாயிலாக கடவுசீட்டு
ADDED : ஜூன் 20, 2025 12:36 AM
கடலுார்:புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், இடைகடவு சீட்டு வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் கனிமங்களை இருப்பில் வைத்தல் மற்றும் கனிம வினியோகம் குறித்த தமிழ்நாடு விதிகள் 2011-ன் படி இருப்பு கிடங்கு அமைத்து சாதாரண வகை கற்கள், ஜல்லி, எம்.சேண்ட், கிராவல் போன்ற பிறவகை கனிமங்களை கொண்டு செல்ல இதுநாள் வரை கடலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, கடலுார் அலுவலகத்தில் நேரில் இடைகடவு சீட்டு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அரசின் வழிகாட்டுதலின்படி 2025-26ம் நிதியாண்டில் கடலுார் மாவட்டத்தில் 12ம் தேதி முதல் கலெக்டரிடம் பதிவு செய்யப்பட்டுள்ள இருப்பு கிடங்குகளிலிருந்து கனிமங்களை எடுத்து செல்ல www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நடைச்சீட்டுகளின் அடிப்படையில் இடைகடவு சீட்டு இணையதளம் வாயிலாக மட்டுமே வழங்கப்படும்.
மேலும், மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ள இருப்பு கிடங்குகளை உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.