/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பண்ருட்டி முத்தையர் பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சாதனை பண்ருட்டி முத்தையர் பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சாதனை
பண்ருட்டி முத்தையர் பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சாதனை
பண்ருட்டி முத்தையர் பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சாதனை
பண்ருட்டி முத்தையர் பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சாதனை
ADDED : செப் 25, 2025 03:43 AM

கடலுார் : பண்ருட்டி முத்தையர் பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்றதையொட்டி பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த பீச் வாலிபால், வாள் சண்டை, தடகள போட்டிகளில் வெற்றிபெற்றனர். பீச் வாலிபால் போட்டியில் 14வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் அர்ஜூன், ஜீவன் தங்கப்பதக்கமும், 17வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் அறிவழகன், பாலச்சந்தர், ஆகாஷ் வெண்கல பதக்கம் பெற்றனர். 19வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவிகள் நித்யஸ்ரீ, அஸ்விதா, சுரேஷ்ஸ்ரீ வெள்ளிப்பதக்கமும், தடகள போட்டியில் குண்டு எறிதலில் மாணவி மதுமிதா, உயரம் தாண்டுதலில் மாணவி கனிஷ்கா வெள்ளிப்பதக்கமும், வாள் சண்டை போட்டியில் மாணவிகள் தாரணி, சண்முகப்ரியா, பூஜா, அஸ்விதா, வர்ஷா, காயத்ரி, லாவண்யா தங்கப்பதக்கமும், மாணவிகள் பிரியா, கோபிகா, பூவரசி வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். மாணவிகள் கிருத்திகா, ஜென்சி, யமுனா, சிவரஞ்சனி, தனுஸ்ரீ, ஜீவிதா, சண்மதி, தேவிப்ரியா வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றிபெற்ற மாணவிகள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இசபெல்லா தாமரைச்செல்வி, வெங்கடேஷ், ஹபினேஷ் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் பெர்ட்டில்லா நோபர்ட் பாராட்டினார்.