/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி ஆய்வுஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு
ADDED : ஜன 07, 2024 05:45 AM

சிறுபாக்கம்; மங்களூர் ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியை, சேர்மன் சுகுணா சங்கர் ஆய்வு செய்தார்.
மங்களூர் ஒன்றிய வளாகத்தில் 3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிய ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியை, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் ஆய்வு செய்தார். அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், திட்டப் பணிகளின் விபரம், கால அளவீடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது, பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன், நிர்வாக மேலாளர் ராஜாராமன், துணை பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், கணபதி, குணசேகரன், தி.மு.க., நிர்வாகி ராமதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.