Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஞ்சமி வழிபாடு

பஞ்சமி வழிபாடு

பஞ்சமி வழிபாடு

பஞ்சமி வழிபாடு

ADDED : மார் 20, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வராஹி அம்மன் உட்பட சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணியளவில் வாழை இலையில் அரிசி நிரப்பி, பூசணி உள்ளிட்ட பொருட்கள் வைத்து, சுமங்கலி பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us